Home Page
cover of சிறுமை கண்டு பொங்குவாய்! -Episode1 _intro
சிறுமை கண்டு பொங்குவாய்! -Episode1 _intro

சிறுமை கண்டு பொங்குவாய்! -Episode1 _intro

Dr.Jeyanthi

0 followers

00:00-02:08

This podcast airs some of our grievance which we accept silently. The title of the podcast is a famous line of one of the most celebrated Tamil poets Bharathi. I welcome audience to share their pain to be aired with mine. It’s time to raise our voice!

Podcastbharathiyarsocialawarenessairyourgrievance
7
Plays
0
Shares

Audio hosting, extended storage and much more

AI Mastering

Transcription

எனக்குப் பிடித்த பாரதியின் வரிகள் ஏராளம். என்னைச் சிந்திக்க வைத்த, தூங்க விடாது பாதித்த பாரதியின் வரிகள் பல. அவற்றில் என்மீது மிகவும் தாக்கம் ஏற்படுத்திய வரிதான் "சிறுமை கண்டு பொங்குவாய்". இந்த வரிதான் தவறு நடக்கும் இடத்தில் தட்டிக் கேட்கும் தைரியத்தை எனக்குக் கொடுத்தது. நம்மில் பலரும் சிறு வயதிலிருந்து சிறுமைகளை வீட்டிலோ, வெளி இடங்களிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, அல்லது பொது இடங்களிலோ எதிர்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவற்றை நாம் பொறுத்துக் கொண்டதால் இந்த சிறுமைகள் "Socially accepted norms" ஆக மாறி விடுகின்றன. உதாரணத்திற்கு லஞ்சமும், வரதட்சணைக் கொடுமையும் கூறலாம் . இவற்றிற்கு எதிராக இன்று யாரும் பேசுவது கூட கிடையாது. ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுப்பதும், பெண் வீட்டாரிடம் இருந்தது கார், பைக், கிலோ கணக்கில் நகை, ஆடம்பர கல்யாணம் demand செய்வதும் normal ஆகிவிட்டது. இது வெகுகாலமாக நடப்பதால் இதை யாரும் ஒரு சிறுமையாகக் கூட பார்ப்பது கிடையாது. பாரதியின் பிறந்தநாளான இன்று சிறுமை கண்டு பொங்குவாய் என்ற தலைப்பில் podcastஐத் தொடங்குவதில் நான் பெருமை கொள்ளுகிறேன். இதில் நாம்எதிர்கொள்ளும் பல சிறுமைகளைப் பற்றிப் பேசுவோம். இனி சிறுமை கண்டு பொங்கும் நேரம். நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த சிறுமைகளை எங்களுக்கு அனுப்பலாம். உங்கள் பெயர், ஊர் பற்றி விவரங்களைக் கூற வேண்டிய தேவை இல்லை. அடுத்த வாரம் நான் எதிர்கொண்ட சிறுமைகளுடன் உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்களுடன் நான் ஜெயந்தி

Other Creators